மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
வாய்மேடு அருகே மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
வாய்மேடு:
வாய்மேடு அருகே உள்ள பிராந்தியங்கரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏ.எப்.சி.சி. நண்பர்கள் நடத்திய இந்த கிரிக்கெட் போட்டியில் 35 அணியினர் கலந்து கொண்டனர். அதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசை பொன்னிரை அணியினரும், 2-ம் பரிசை பிராந்தியங்கரை அணியினரும், 3-ம் பரிசை ஆதனூர் அணியினரும் பெற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவரும், பெரியாண்டவர் கேஸ் ஏஜென்சி உரிமையாளருமான செந்தில்குமார் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பெரியகோவில்பத்து பகுதியை சேர்ந்த கவின் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.