பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு

காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2022-10-18 18:45 GMT

காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி நடந்த பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, முதலிடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்