கவிதைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
ஆழ்வார்குறிச்சியில் கவிதைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கடையம்:
ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 2 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாரதியார் கவிதை போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 12 பள்ளிகளை சார்ந்த 70 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் ஆழ்வார்குறிச்சி சைலபதி நடுநிலைப்பள்ளி, சிவசைலம் அத்திரிகலா நடுநிலைப்பள்ளி மற்றும் பரமகல்யாணி தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு பள்ளியின் செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கட சுப்பிரமணியன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதல் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு பாரதியார் திரைப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.