நாடக கலைஞர்களுக்கு பரிசு

கள்ளக்குறிச்சியில் நாடக கலைஞர்களுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் பரிசு வழங்கினார்.

Update: 2022-11-26 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி சிறந்த கலைஞர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் கலை பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், கலைஞர்களின் கலைப்பண்புகளை ஊக்குவிக்கும் வகையில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் இதுபோன்று பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றார்.நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், மாவட்ட கலைப் பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) நீலமேகன், தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்