தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-27 19:39 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறையை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (வயது 29). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மாத கைக்குழந்தை உள்ளது. இந்தநிலையில் நேற்று ராஜேந்திர பிரசாத் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்