தனியார் வேலைவாய்ப்பு முகாம்
உடன்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
உடன்குடி:
உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகம் முன்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி முகாமை தொடங்கி வைத்தார். தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவி, உடன்குடி கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் 13-வது வார்டு கவுன்சிலர் அஸ்ஸாப் கல்லாசி, வணிகர்கள் சங்க தலைவர் அம்புரோஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் படித்த பட்டதாரிகள், மாணவர்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதில் பலருக்கு உடனடியாக வேலைவாய்ப்பு ஆணை வழங்கப்பட்டது.