அரசு நூலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
செங்கோட்டை அரசு நூலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
செங்கோட்டை:
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் செங்கோட்டை அரசு நூலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் சென்னை, திருச்சி, கோவை, நாகர்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 17 தனியார் நிறுவனங்களில் இருந்து கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வு செய்தனா். இதில் 150 பேருக்கு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முகாமில் வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் ஆதிமூலம், பொருளாளர் தண்டமிழ் தாசன் பா.சுதாகர், இணைச் செயலாளர் செண்பக குற்றாலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.