தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

Update: 2023-07-29 20:00 GMT

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 2-ந்தேதி காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நடக்கிறது. மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை இணைந்து இந்த முகாம் நடத்தப்படுகிறது.

இதில், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். 8-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு மற்றும் உயர்கல்வி பயின்ற மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன உத்தரவு வழங்கப்படும். இந்த முகாமை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்