ரெயிலில் அடிபட்டு தனியார் ஊழியர் பலி

தாமரைப்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2022-12-24 16:42 GMT

திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி அருகே நேற்று ரெயில் தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் ஆண் உடல் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், பிணமாக கிடந்தவர் கம்பிளியம்பட்டியை அடுத்த ஆண்டிபட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மூர்த்தி (வயது 29) என்பதும், அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்