திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் தொடங்கி வைத்தாா். இந்த முகாமில் பனியன் துறை உள்பட 18 நிறுவனங்களை சேர்ந்த மனிதவள அலுவலர்கள் பங்கேற்று முகாமில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ்களை சாிபார்த்து பின்னர் நேர்முக தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்தனர். 75 பேர் கலந்து கொண்ட இந்த முகாமில் 3 மாற்றுத்திறனாளிகள் உள்பட 40 போ் பணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.