தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

சூளகிரி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-07 19:30 GMT

சூளகிரி:-

சூளகிரி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

தனியார் நிறுவன ஊழியர்

சூளகிரி அருகே எட்டிபள்ளி குட்டாவை சேர்ந்தவர் சங்கர் (வயது 24), தனியார் நிறுவன ஊழியர். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோரிடம் கூறி வந்ததாக தெரிகிறது.

ஆனால் சங்கரின் காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதில் மனம் உடைந்த சங்கர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனம் உடைந்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதற்கிடையே சங்கர் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்