தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
பாளையங்கோட்டையில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் செல்வின் நகரை சேர்ந்தவர் சந்தனபிச்சை. இவரின் மகன் ஆன்ட்ரூஸ் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகின்றன. சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த ஆன்ட்ரூஸ், மாடி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.