சித்தோடு அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு

சித்தோடு அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தாா்.

Update: 2022-06-30 22:17 GMT

பவானி:

ஆப்பக்கூடல் அருகே உள்ள பெருந்தலையூர் பகுதியைச் சோந்தவர் செங்கோட்டையன். அவருடைய மகன் அருள்குமார்(வயது 37). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அருள்குமார் வேலையை முடித்துவிட்டு் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

சித்தோட்டை அடுத்த தனியார் கலைக்கல்லூரி அருகே சென்றபோது அருள்குமாரின் மோட்டார்சைக்கிளும், எதிரே வந்த லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அருள்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அருள்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்