தனியார் நிறுவன ஊழியர் பலி

சரக்கு வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

Update: 2022-07-01 17:01 GMT

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பார்த்திபன்(வயது 34). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி- சென்னை மார்க்கமாக சென்று கொண்டிருந்தார். விழுப்புரத்தை அடுத்த பிடாகம் மேம்பாலம் அருகே செல்லும்போது அதே திசையில் பின்னால் வந்த சரக்கு வாகனம், பார்த்திபனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்