கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் நிறுவன ஊழியர் `திடீர்' சாவு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்த்த தனியார் நிறுவன ஊழியர் திடீரென இறந்தார்.

Update: 2022-11-15 20:12 GMT

கூடங்குளம்:

திருச்சி போளூர் பகுதியைச் சேர்ந்த சமய கண்ணன் மகன் ராஜேஷ் (வயது 33). இவர் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலைய திட்டப்பணியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு ஊழியராக (சேப்டி ஆபீசர்) வேலை பார்த்து வந்தார். ராஜேஷ் இரவு நேர பணி முடிந்து நேற்று காலை 7 மணி அளவில் திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு தரையில் விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராதாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேசை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்தார். உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

ராஜேசுக்கு திருமணம் ஆகி 4 மாதங்களே ஆகிறது. இந்த நிலையில் அவர் திடீரென இறந்தது சக ஊழியர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்