தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
கடன் தொல்லையால் அவதியடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 38). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சங்கர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை அவரால் கொடுக்க முடியாததால் பணம் கொடுத்தவர்கள் அதனை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சங்கர் நேற்று இரவு 8 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.