மணவாளக்குறிச்சி அருகே அம்மன் கோவிலில் திருடிய தனியார் நிறுவன ஊழியர் கைது
மணவாளக்குறிச்சி அருகே அம்மன் கோவிலில் திருடிய தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
மணவாளக்குறிச்சி:
மணவாளக்குறிச்சி அருகே காருபாறை உலகளந்தாள் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 26-ந் தேதி இரவு பூசாரி பூஜைகள் முடிந்த பின்பு கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். மறுநாள் காலையில் கோவிலுக்கு வந்த போது அங்கு இருந்த வெண்கல தூக்கு விளக்கு, சூடத் தட்டு, வெண்கல சிங்கி போன்றவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஊர் தலைவர் சுந்தரலிங்கம் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் ெகாடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ேகாவிலில் திருடிய மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மணவாளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார் வெள்ளிமலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்த ேபாது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காருபாறையைச் சேர்ந்த அஜய் என்பவர் மகன் அஜித் (வயது25) என்பதும், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் இவர் கோவிலில் இருந்து பொருட்களை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அஜித்தை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கோவிலில் திருட்டு போன பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பெருமாள் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.