தனியார் கல்லூரி பஸ்மோதி செருப்பு கடை உரிமையாளர் பலி
தனியார் கல்லூரி பஸ்மோதி செருப்பு கடை உரிமையாளர் பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராமசாமி தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 48). இவர் இளங்குப்பன் தெருவில் செருப்பு கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் பஜார் சாலையில் சாலையை கடந்துள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ் அவர் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.