தனியார் சரக்கு பெட்டக முனைய தொழிலாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
தூத்துக்குடி துறைமுகத்தில் தனியார் சரக்கு பெட்டக முனைய தொழிலாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் செயல்பட்டு வரும் தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை, அந்த நிறுவனம் படிபடியாக நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 01.04.21 முதல் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அந்த நிறுவன தொழிலாளர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டம் நடத்தினர். மேலும் இதே நிலை தொடர்ந்தால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.