தனியார் பஸ் நிறுவன மேலாளர் கைது

தனியார் பஸ் நிறுவன மேலாளர் கைது

Update: 2023-04-06 18:45 GMT

ரூ.410 கோடி மோசடி புகாரில் தனியார் பஸ் நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

முதலீடு

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர். கடந்த 2020-ம் ஆண்டு வரை முதலீட்டாளர்களுக்கு முறையாக பணம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு கமாலுதீன் இறந்த பிறகு அவரது குடும்பத்தினரிடம் முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டனர். ஆனால் அவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

மேலாளர் கைது

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சுமார் 6,131 பேரிடம், ரூ.410 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ் தலைமையிலான போலீசார் நேற்று தலைமறைவாக இருந்து வந்த கமாலுதீனின் மேலாளர் நாராயணசாமியை(வயது 63) கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்