அரசு வங்கிக்கு பூட்டுப்போட்ட கட்டிட உரிமையாளர்

அரசு வங்கிக்கு பூட்டுப்போட்ட கட்டிட உரிமையாளர்

Update: 2022-09-06 12:35 GMT

வீரபாண்டி

திருப்பூர் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவருக்கு சொந்தமான கட்டிடம் டி.கே.டி.பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ளது. இந்த கட்டிடத்தில் அரசு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வங்கியின் ஒப்பந்தம் முடிவடைந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதாக கூறி வங்கியின் கதவிற்கு கட்டிட உரிமையாளர் நேற்று காலை பூட்டுப் போட்டார். இதனால் பணிக்கு வந்த ஊழியர்கள் வங்கிக்கு வெளியில் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து வங்கியின் மேலாளர் கட்டிட உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் பின்பு வங்கியை திறந்தனர். ஆனாலும் வங்கியின் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை உரிமையாளர் துண்டித்ததால் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் பலரும் அவதிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கட்டிட உரிமையாளரிடம் வங்கியின் மேல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் வங்கியின் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

---

Tags:    

மேலும் செய்திகள்