தனியார் வங்கி காவலாளி மயங்கி விழுந்து சாவு

தனியார் வங்கி காவலாளி மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2022-11-07 18:41 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகா, கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (53). இவர் ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலையில் இருந்த போது திடீரென மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவர் வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்