சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிகள் திருந்தி வாழ வேண்டும் மாவட்ட நீதிபதி பூர்ணிமா அறிவுரை

சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிகள் திருந்தி வாழ வேண்டும் என்று மாவட்ட நீதிபதி பூர்ணிமா அறிவுரை வழங்கி உள்ளாா்.

Update: 2022-12-14 18:45 GMT


விழுப்புரம் அருகே வேடம்பட்டில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் கைதிகளுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கினார். சிறை கண்காணிப்பாளர் தமிழ்மாறன் வரவேற்றார். தொடர்ந்து, மாவட்ட நீதிபதி பூர்ணிமா, கைதிகளுக்கு பல்வேறு சட்ட கருத்துகளையும், விளக்கங்களையும் அளித்தார். மேலும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணிகள், செயல்பாடுகள், சட்டம், மனித உரிமைகள், சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கான அடிப்படை உரிமைகள், கடமைகள் குறித்தும், குடும்ப வன்முறைகள் சம்பந்தமாக பல்வேறு விளக்கங்கள், கதையாக கூறி தாங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதோடு சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வரும் கைதிகள் வரும்காலங்களில் எந்தவொரு தவறும் செய்யாமல் திருந்தி வாழ வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கைதிகளுக்கு மகாத்மா காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர், அம்பேத்கர் மற்றும் அப்துல்கலாமின் அக்னி சிறகுகள் போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் அரசு வக்கீல் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முதன்மை சார்பு நீதிபதி விஜயகுமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்