போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்

போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்

Update: 2022-09-21 19:16 GMT


ராமநாதபுரம் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் கேணிக்கரை பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றிலும், பஜார் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 2 இடங்களிலும் திருட்டு நடந்தது. இந்த திருட்டு தொடர்பாக ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த அஷ்ரப்அலி (வயது 28) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இவர் மண்டபம் அருகே கடலோர பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணைக்காக ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று போலீஸ் நிலையத்தில் இருந்த அஷ்ரப்அலிகழிப்பறைக்கு சென்றார். அங்கு ஜன்னல் கதவை உடைத்து தப்பியோடி விட்டார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதைதொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு அவரை தேடிவந்தனர். போலீசார் விசாரணையில் அவர் வெளியூருக்கு தப்பி சென்றிருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர். விசாரணை கைதி தப்பிச்சென்றது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை விசாரணை நடத்தினார். மேலும் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தார். ராமநாதபுரத்தில் விசாரணை கைதி போலீஸ் நிலையத்தில் ஜன்னலை உடைத்து தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்