திருச்சி மத்திய சிறையில் கைதி சாவு

திருச்சி மத்திய சிறையில் கைதியில் இறந்தார்.

Update: 2023-07-26 19:40 GMT

தொட்டியத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 77). இவர் திருச்சி வயலூர் சாலை சண்முகாநகர் 9-வது குறுக்குத்தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய அவர், ஊழல் வழக்கில் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 19-ந் தேதி அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் மூச்சு திணறலுக்காக சிகிச்சை பெற்ற நிலையில் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்