பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரி மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
சென்னை,
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரி, பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையைச் சுட்டிக்காட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.