ஆரல்வாய்மொழியில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா;தென்னங்கன்றுகள் வழங்கி பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

ஆரல்வாய்மொழியில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை தென்னங்கன்றுகள் வழங்கி பா.ஜ.க.வினர் கொண்டாடினர்.

Update: 2022-09-17 20:51 GMT

ஆரல்வாய்மொழி, 

ஆரல்வாய்மொழியில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை தென்னங்கன்றுகள் வழங்கி பா.ஜ.க.வினர் கொண்டாடினர்.

மோடி பிறந்த நாள் விழா

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் விழா ஆரல்வாய்மொழி நகர பா.ஜ.க. சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு பா.ஜ.க. தலைவர் நரேந்திரகுமார் தலைமை தாங்கினார். இளைஞர் அணி தலைவர் சந்திரகுமார் முன்னிலை வகித்தார். இதையொட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முத்துநகர், சுப்பிரமணியபுரம், கணேசபுரம், குமாரபுரம், கன்யாஸ்பின் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பும், மருத்துவர் நகர், மூவேந்தர் நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

பெருமாள்புரம் காமராஜர் சிலை அருகே இனிப்புடன் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளும், ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் முதியோர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் சொக்கலிங்கம், தோவாளை கிழக்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், பொது செயலாளர் மாதேவன்பிள்ளை, நகர இளைஞரணி தலைவர் சந்திரகுமார், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் சிங்காரவேல், ஒன்றிய மகளிர் அணி தலைவி ஜீவிதா மற்றும் பாலகிருஷ்ணன், ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்