பிரதமர் மோடி வரும் 8 ஆம் தேதி தமிழகம் வருகை- டிஜிபி ஆலோசனை

மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி ஆலோசனை மேற்கொண்டார்.

Update: 2023-04-03 12:46 GMT

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஏப்ரல் 8-ம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார். பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி சென்னை கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் முனையத்தை தொடங்கி வைக்கிறார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அதிகரிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்