தமிழ்மொழியின் பெருமையை எங்கு சென்றாலும் பிரதமர் மோடி பறை சாற்றுகிறார்

தமிழ்மொழியின் பெருமையை எங்கு சென்றாலும் பிரதமர் மோடி பறை சாற்றுகிறார் என பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கூறினார்.

Update: 2023-06-25 19:16 GMT


விருதுநகரில் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றி விட்டு பேசும்போது பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் இன்று என்னை பாராட்டி இருப்பார் என்று கூறினார். அந்த அளவிற்கு பெருந்தலைவர் காமராஜர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர் பிரதமர் மோடி. தமிழகத்தில் 65 லட்சம் விவசாயிகளுக்கு நிதி உதவியினை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். 60 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளுக்கு ஐல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி உள்ளார். ஒரே ஆண்டில் தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகளை வழங்கியுள்ளார். எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பற்றி பேசும் தி.மு.க.வினருக்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விருதுநகர் மருத்துவக்கல்லூரி கண்ணுக்கு தெரியவில்லை. எங்கு சென்றாலும் தமிழ், தமிழ் கலாசாரம், தமிழகமக்களின் பெருமை பற்றி பறை சாற்றுகிறார். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். பிரதமரின் நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் முன்னேறி உள்ளது. தி.மு.க. அரசு நீட் தேர்வு பிரச்சினையில் தமிழக மாணவர்களை ஏமாற்றி வருகிறது. ஆதலால் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் அவரது கரத்தை வலுப்படுத்த ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்