முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 54 இடங்களில் சிறப்பான வரவேற்பு

ராமநாதபுரத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 54 இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிப்போம் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

Update: 2023-08-14 18:45 GMT

முதுகுளத்தூர்,

ராமநாதபுரத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 54 இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிப்போம் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

பாக முகவர் கூட்டம்

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி பாக முகவர் கூட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், தொகுதி பொறுப்பாளர் முன்னாள் மேயர் குழந்தைவேலு, இலக்கிய அணி துணைச்செயலாளர் பெருநாழி போஸ், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் திவாகரன், தலைமைச்செயற்குழு உறுப்பினர் லட்சுமி முத்துராமலிங்கம், முன்னாள் சேர்மன் கருப்பையா, தகவல் தொழில்நுட்ப பிரிவு விஜய்கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

54 இடங்களில் வரவேற்பு

அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-

வருகிற 17, 18-ந்தேதிகளில் ராமநாதபுரம் வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லை பகுதியான பார்த்திபனூரில் இருந்து ராமநாதபுரம் வரை 54 இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிப்போம்.

17-ந்தேதி அன்று ராமநாதபுரத்தில் நடைபெறும் முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை, சாயல்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தி.மு.க. பாக முகவர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கலந்துரையாடுகிறார்.

18-ந்தேதி மண்டபத்தில் நடைபெறும் மீனவர் நல மாநாடு மற்றும் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்..

இந்நிகழ்ச்சிகளில் முதுகுளத்தூர் தொகுதியை சேர்ந்த பாக முகவர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், பூபதி மணி, கோவிந்தராஜ், சாயல்குடி ஒன்றிய செயலாளர்கள் ஜெயபாலன், ஆப்பனூர் ஆறுமுகவேல், குலாம் முகைதீன், மாயகிருஷ்ணன், கமுதி ஒன்றிய செயலாளர் வாசுதேவன், சண்முகநாதன், மனோகரன், அமைச்சர் நேர்முக உதவியாளர் கண்ணன், நகரச்செயலாளர்கள் ஷாஜகான், பாலமுருகன், வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் நாகஜோதி ராமர், மாவட்ட கவுன்சிலர் சாம்புகுளம் அருண் பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர்கள் சண்முகவள்ளி சண்முகம், பாலுச்சாமி, அபூபக்கர் சித்திக், வளர்மதி சாந்தகுமார், பாண்டி, குழந்தைதெரோஸ் சிங்கராயர், தீபா நீதிராஜன், அன்னபூரணம் பாண்டி, முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக உதவியாளர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், மீனவரணி கொல்லங்குளம் காசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்