பிரதமர் வீடு கட்டும் திட்ட ஆலோசனை கூட்டம்
கொள்ளிடம் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
கொள்ளிடம்;
கொள்ளிடம் அருகே கடவாசல் ஊராட்சி அலுவலகத்தில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் வளர்ச்சி பணிகள் குறித்து கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர், பணி மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகள் காலக்கெடுக்குள் வீடுகளை கட்டி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.கூட்டத்தில் உதவி இயக்குனர் (தணிக்கை) கோவிந்தராஜ், கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மொழி, ரெஜினாராணி, ஒன்றிய பொறியாளர்கள், ஊராட்சி தலைவர் பாப்பாத்தி பன்னீர்செல்வம், மற்றும் ஊராட்சி செயலாளர்கள், ஊரக வளர்ச்சித் துறையினர் கலந்து கொண்டனர்.