ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-05-29 17:01 GMT

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு முறைகேடுகளை கண்டித்தும், பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டியும் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட கிளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.

கரூர் கல்வி மாவட்ட செயலாளர் பிரான்சிஸ்டேனியல் ராஜா வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜெயராஜ் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநில துணைத்தலைவர் முருகன் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் தமிழரசி உள்பட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்