ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-09-05 18:45 GMT

மோகனூர் ஒன்றியத்தில் பணிபுரியும் குறிப்பிட்ட ஆசிரியர்களை மட்டும் 2-ம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு கருத்தாளர்களாக நியமிப்பதை கண்டித்து நேற்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மோகனூர் வட்டார செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் மாதேஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். முடிவில் சுயம்புலிங்கம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்