ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
தமிழ்நாடு முழுவதும் ஒளிவு மறைவற்ற ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்துவிட்டு தொடக்க கல்வித்துறையில் விதிகளுக்கு புறம்பாக தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் நிர்வாக மாறுதல்களை எதிர்த்தும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் ஒன்றிய மாறுதல், மாவட்ட மாறுதல் கலந்தாய்வை நடத்தக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் கலந்தாய்வு மையங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் கல்வி மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகசாமி வரவேற்றார். வல்லம் வட்டார தலைவர் நடராசன், ஒலக்கூர் வட்டார முன்னாள் தலைவர் ராஜேஷ், செயலாளர் கணபதி, விக்கிரவாண்டி வட்டார தலைவர் மகிமைதாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் அம்பிகா நன்றி கூறினார்.