தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-07 18:45 GMT


அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். மகளிர் வளையமைப்பு துணைத்தலைவர் பாலதிரிபுரசுந்தரி வரவேற்றார். மாநில துணைச் செயலாளர் ஜூலியஸ், மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை மூலம் சம்பளம் கொடுப்பதில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறாலும், ஊதியம் வழங்குவதில் ஏற்பட்ட கவனக்குறைவாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற தாமதம் ஏற்படாத வகையில் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும். பழைய முறையில் உரிய நிதி ஒதுக்கி குறித்த காலத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் சில நாட்களில் ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் மாவட்ட கல்வி அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர்கள் கூறினர்.முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் வடுகநாதன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்