தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-09-08 20:06 GMT

தொட்டியம் அருகே ஏழுர்பட்டியில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பி.எட் மாணவர்கள் பள்ளிகளில் கள ஆய்வு செய்ய வருவதை எதிர்த்தும், தமிழக அரசு ஏற்கனவே கொடுத்த உறுதி மொழியை பின்பற்றாததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாரத் தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் கீதாராணி, ஆசிரியர் சந்திரசேகரன், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்