ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கூட்டம்
தலைஞாயிறில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கூட்டம் நடந்தது.
வாய்மேடு:
தலைஞாயிறில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் பாலகுமார் தலைமை தாங்கினார். மாநில கூடுதல் தலைவர் திருமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயலாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் கோட்டை முற்றுகை போராட்டத்தில் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும். 5 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்களிடம் வலியுறுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு மற்றும் சரண்விடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.