தூக்குப்போட்டு பூசாரி தற்கொலை
தூக்குப்போட்டு பூசாரி தற்கொலை செய்து கொண்டார்.
காரியாபட்டி,
காரியாபட்டி அச்சம்பட்டி தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 40). இவர் காரியாபட்டி, திருச்சுழி முக்கு ரோட்டில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோவில் பூசாரியாகவும், கார் டிரைவராகவும் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் மது போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று விட்டு வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இவர் திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி விக்னேஸ்வரி காரியாபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காளிமுத்துவின் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.