கத்தியை காட்டி மிரட்டிய பூசாரி கைது

கத்தியை காட்டி மிரட்டிய பூசாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-20 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில் மகாசாத்தையா அய்யனார் கோவில் பூசாரியாக இருப்பவர் சரவணன். இவருக்கும், இதே கோவிலில் பூசாரியாக வேலை செய்யும் கண்ணன் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணன் கோவில் கருவறைக்குள் பூஜை செய்து கொண்டிருந்த சரவணனை கத்தியை காட்டி மிரட்டி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சாலைக்கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூசாரி கண்ணனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்