விண்ணைத்தொட்ட தக்காளி, சின்னவெங்காயம் விலை

கடந்த மாதத்தை விட இருமடங்காக விண்ணைத் தொடும் வகையில் தக்காளி, சின்னவெங்காயம் விலை உயர்ந்துள்ளது. இஞ்சி விலை கலங்க வைக்கிறது.

Update: 2023-07-10 19:15 GMT

கடந்த மாதத்தை விட இருமடங்காக விண்ணைத் தொடும் வகையில் தக்காளி, சின்னவெங்காயம் விலை உயர்ந்துள்ளது. இஞ்சி விலை கலங்க வைக்கிறது.


காய்கறி விற்பனை


கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 5 இடங்களில் மொத்த காய்கறி சந்தைகள் உள்ளன. இந்த சந்தைக ளுக்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அங்கு வியாபாரிகளுக்கு ஏல முறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கோவையில் உள்ள சந்தைகளுக்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. கோவை மார்க்கெட்டுகளுக்கு தினமும் 110-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படுவது வழக்கம். ஆனால் தற்போது சராசரியாக 40 லாரிகளில் மட்டுமே காய்கறி வரத்து உள்ளது.


புதிய உச்சத்தில் விலை


இதற்கிடையே கோவை மாவட்டத்திலும் காய்கறி சாகுபடி குறைந்து உள்ளது. இதனால் காய்கறிகளை விவசாயிகள் விற்ப னைக்கு கொண்டு வருவது இல்லை. இது போன்ற காரணங்க ளால் கோவையில் உள்ள மொத்த சந்தைகளில் காய்கறி விலை புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.


விண்ணைத் தொடும் வகை யில் தக்காளி , சின்னவெங் காயம் விலை உயர்ந்து விட்டதால் கிலோ கணக்கில் காய்கறி வாங்கிய பொதுமக்கள் தற்போது கிராம் என்ற அளவில் காய்கறி வாங்கும் நிலை உள் ளது. மேலும் காய்கறி விலை உயர்வு வீடுகளில் உணவு தயாரிப் பது மற்றும் குழம்பு வைப்பதில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


கிடுகிடு உயர்வு


கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தற்போது நாட்டு தக்காளி ரூ.120, ஆப்பிள் தக்காளி ரூ.120-க்கு விற்பனை செய்யப் பட்டு வருகிறது. இதுதவிர மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்து உள்ளது.


இந்த நிலையில் தக்காளிக்கு போட்டியாக சின்ன வெங்காயத் தின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சின்ன வெங்கா யம் ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.180 வரை விற்கப்படுகிறது.

அதற்கு போட்டி யாக அசைவ உணவுக்கு சுவை கூட்டும் இஞ்சி விலை கிலோ ரூ.300 ஆக உயர்ந்து உள்ளது.

காய்கறி விலை அதிகரிப்ப தால் சைவ பிரியர்கள் கவலை அடைந்து உள்ளனர். இஞ்சி விலை உயர்வு அசைவ பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து கோவை காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், கோவை மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது.

இதில் சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. பருவமழை குறைந்து விவசாயிகள் மீண்டும் சாகுபடியில் ஈடுபடும் போது காய்கறி வரத்து அதிகரிக்கும்.

அப்போது காய்கறி களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.


உழவர் சந்தையில் குறைவு


கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறி விலை (கிலோவுக்கு) விவரம் வருமாறு-


வெண்டைக்காய் -ரூ.46, தக்காளி (நாடு) - ரூ.85, மிளகாய்-80, சின்னவெங்காயம் -ரூ.126, பெரியவெங்காயம்-ரூ.23, சேனைக் கிழங்கு -ரூ.50, கேரட் ரூ.55, இஞ்சி- ரூ.250, பூண்டு -ரூ.155, உருளைக்கிழங்கு (ஊட்டி)- ரூ.66, வெளியூர் உருளைக்கிழங்கு- ரூ.35, கத்தரிக்காய்-ரூ.42-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கோவையில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டுகளில் விலை அதிகமாக இருப்பதால் உழவர் சந்தைகளில் காய்கறி வாங்க வரும் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.


மேலும் செய்திகள்