நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள்: தேர்தல் கமிஷன் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், தேர்தல் கமிஷனும் தனது பணிகளை ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2023-05-30 16:20 GMT

சென்னை,

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் இந்திய தேர்தல் கமிஷன் ஈடுபட உள்ளது. முதல் கட்டமாக வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

அந்த பணிகளை தேர்தல் கமிஷன் முழு வீச்சில் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. வரும் அக்டோபர் மாதம் இறுதியில் இந்திய தேர்தல் கமிஷனின் ஆணையர் குழு தமிழகம் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டின் ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கொண்ட குழு அமைத்து மக்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில்தான் எம்பிக்கள் எண்ணிக்கையை மாற்றும் முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், தேர்தல் கமிஷனும் தனது பணிகளை ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்