மழை வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடரை சமாளிக்க ஏற்பாடுகள் தயார்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் மழை வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடரை சமாளிக்க ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-10-29 18:45 GMT

குடியாத்தம்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் மழை வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடரை சமாளிக்க ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்தாண்டு குடியாத்தம் பகுதியில் பெய்த பலத்தமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது பல கிராமங்கள் வெளிவட்டாரத்தில் இருந்து பல நாட்கள் துண்டிக்கப்பட்டன. மேலும் கடந்த ஆண்டு பெய்த மழையால் பல இடங்களில் ஏரிக்கரைகளும், வெள்ளநீர் செல்லும் கால்வாய்களும் சேதமடைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் விளை நிலங்களுக்குள்ளும் மழை நீரும், வெள்ளநீரும் புகுந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் மழை வெள்ளம் மற்றும் மழை பாதிப்பு, இயற்கை பேரிடர் எதிர்கொள்ளும் வகையில் மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரம் மற்றும் பொக்லைன் எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஊரக வளர்ச்சித்துறை வேலூர் திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் உத்தரவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 750 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் மணலை மூட்டைகளில் கட்டும் பணிகள் நேற்று நடைபெற்றது இந்த பணிகளை குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் நத்தம்பிரதீஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், எஸ்.சாந்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மேலும் தேவைப்படும் எனில் மழைக்காலங்களில் மரங்கள் விழுந்தால் அதை அகற்றுவதற்கு தேவையான கருவிகள், கயிறுகள், லைட்டுகள் உள்ளிட்டவைகளும் பொக்லைன் எந்திரங்கள், உரிமையாளர்களின் தொலைபேசி எண்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மழை வெள்ளம் மற்றும் இடர்பாடுகளின் போது உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஊரக வளர்ச்சித்துறையினர் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்