கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருக்காட்டுப்பள்ளி அருகே திருமணமான 2 நாட்களில் கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்காட்டுப்பள்ளி;
திருக்காட்டுப்பள்ளி அருகே திருமணமான 2 நாட்களில் கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கர்ப்பம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கே.வி.பேட்டை கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகள் சரண்யா(வயது21). இவர் தனது உறவினரான தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விஷ்ணம்பேட்டை மணல்மேடு பகுதியை சேர்ந்த விஜயமூர்த்தி (24) என்பவருடன் கடந்த 3 ஆண்டுகளாக பழகி வந்துள்ளார். இதனால் சரண்யா கர்ப்பமடைய கடந்த 13-ந் அன்பில் மாரியம்மன் கோவில் வைத்து திருமணம் நடந்தது.
தற்கொலை
திருமணத்துக்கு பின் கணவன்- மனைவி இருவரும் தஞ்சை மாவட்டம் விஷ்ணம்பேட்டை மணல்மேடு பகுதியில் உள்ள விஜயமூர்த்தி வீட்டில் இருந்தனர். நேற்று காலை விஜயமூர்த்தியின் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கோட்டையில் சேலையில் தூக்குப்போட்டு சரண்யா தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரண்யாவின் தந்தை அண்ணாதுரை (47) திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.