பாம்பு கடித்து கர்ப்பிணி-குழந்தை சாவு

கரூர் அருகே பாம்பு கடித்து கர்ப்பிணியும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-06-02 18:43 GMT

பாம்பு கடித்தது

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கல்லடை ஊராட்சி நெல்லூர் பட்டியை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி நான்சி (வயது 25). இந்த தம்பதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது நான்சி 2-வது முறையாக கர்ப்பமாகி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காற்றிற்காக வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியின் (செப்டிக்டேங்) மேல் பகுதியில் நான்சி படுத்து அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது விஷ பாம்பு ஒன்று நான்சியை கடித்துள்ளது.

கர்ப்பிணி-குழந்தை சாவு

இதனால் வலி தாங்க முடியாமல் நான்சி அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் நான்சிைய மீட்டு சிகிச்சைக்காக காவல்காரன்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு ெசன்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்ைச அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நான்சிைய பரிசோதனை செய்த டாக்டர்கள் நான்சியும், அவரது வயிற்றில் இருந்த 9 மாத குழந்தையும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து நான்சியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

வழக்கு

இந்த சம்பவம் குறித்து நான்சியின் கணவர் வின்சென்ட் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்