பேரிடர் சீற்றத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை-கலெக்டர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேரிடம் சீற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-28 18:47 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேரிடம் சீற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

47 இடங்கள்

ராணிப்பேட்டை மாவட்டதில் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 47 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் பாதிப்புகள் ஏற்பட்டால், அங்கு வசிக்கும் பொதுமக்களை பேரிடர் சீற்றத்தில் இருந்து மீட்டு பாதுகாக்க தற்காலிகமாக தங்க வைப்பதற்கான முகாம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மின்துறையினருக்கு தாழ்வாக இருக்கும் மின்கம்பிகள், சாய்ந்து விழக்கூடிய நிலையில் இருக்கும் மின்கம்பங்களை கண்டறிந்து அகற்ற, சீர் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தகவல் தெரிவிக்கலாம்

மழையோடு பலமாக காற்று வீசும்போதும், மழை, இடி, மின்னலின்போதும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிப்பதையும், வெளியில் வருவதையும், மரங்களின் கீழே நிற்பதையும், ஆடு, மாடுகளை மின்கம்பங்களில் கட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.

மழைக்காலங்களில் பெருமழை மற்றும் புயல் காற்றால் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதை மற்றும் மழைநீர் தேங்கிய இடத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதைக் கண்டால் உடனுக்குடன் மின்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பங்கள் கீழே விழும் நிலையில் இருந்தாலும், மின்கம்பிகள் தாழ்வாக இருந்தாலும், பயன்பாட்டில் இல்லாத அரசு, தனியார் கட்டிடங்கள் பழுதடைந்து இடிந்து விழக்கூடிய நிலையில் இருந்தாலும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க ேவண்டும்.

தொலைப்பேசி எண்கள்

தகவல் தெரிவிக்க மாவட்டத்தில் 6 தாலுகா அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்கள் மற்றும் தாசில்தார்களின் செல்போன் எண்கள் விவரம் வருமாறு:-

அரக்கோணம் -04177- 236360, 9445000507, ஆற்காடு -04172-235568, 9445000505, வாலாஜா - 04172-299808, 9445000506, சோளிங்கர் -04172-290800, 9384095101, நெமிலி -04177-247260, 9384095102, கலவை -04173-290031, 7010237474.

இது மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய மற்றும் 04172 - 271766 ஆகிய எண்களுடன் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

ஒத்துழைக்க ேவண்டும்

மேலும் நிகழ்வுகளை அவ்வப்போது படம் பிடித்து அல்லது வீடியோவில் வாட்ஸ் அப் மூலமாக 9489668833 என்ற எண்ணுக்கு உடனுக்குடன் அனுப்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் எந்தவித பொருட்சேதமோ, உயிர்சேதமோ நிகழாமல் இருக்க பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்