வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

வருமுன் காப்போம் மருத்துவ முகாமை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

Update: 2022-10-16 15:26 GMT

திருப்பத்தூர் அருகே புதுக்கோட்டை ஊராட்சி, கோவிலூர் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ், ஆவின் இயக்குனர் சின்னபையன், வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்யா, ஊராட்சி தலைவர் ஸ்டெல்லாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்