வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

ஆயல் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-10-03 18:48 GMT

சோளிங்கரை அடுத்த ஆயல் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சந்திரன், சோளிங்கர் ஒன்றியக் குழு துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், ஒன்றியகுழு உறுப்பினர் வேண்டாசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிமாறன், சோளிங்கர் ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர். வட்டார மருத்துவர் கோபிநாத் மற்றும் சுகாதார ஆய்வாளர் சவுந்தரபாண்டியன், டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு சிகிச்சையளித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர் வேண்டாசரவணன் ஆயல் கிராமத்தில் உள்ள மருத்துவமனை கட்டிடம் சரியாக இல்லை, டாக்டர்கள் இல்லை. கட்டிட வசதிக்காக நானும், தலைவரும் இடம் வழங்க தயாராக உள்ளோம். புதிய கட்டிடம் ஏற்படுத்தி, டாக்டர்களை கொண்டு இப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மனு அளித்தார். அதை பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் உடனடியாக அரசுக்கு தெரிவிப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்