வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

அழிஞ்சல்பட்டு கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-09 13:56 GMT

செய்யாறு

செய்யாறு அருகே அழிஞ்சல்பட்டு கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. செய்யாறு சுகாதார துணை இயக்குனர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி, ஊராட்சி மன்ற தலைவர் ஷகிலா கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் வினோத்குமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

முகாமில் 58 கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, 31 நபருக்கு இ.சி.ஜி. பரிசோதனை, 796 நபர்களுக்கு ஆய்வக பரிசோதனை, 79 நபர்களுக்கு கண் பரிசோதனை, 46 நபர்களுக்கு பல் பரிசோதனை, 246 நபர்களுக்கு சித்த மருத்துவ பரிசோதனை உள்பட 1086 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்