வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

சாத்தான்குளம் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-08-12 19:00 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பு கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜ புனிதா தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் மந்திரராஜன் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் ஐலின் சுமதி திட்ட விளக்கவுரையாற்றினார். பங்குத்தந்தை ஜான்சன்ராஜ் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் லட்சுமி, ஸ்வீட்லின் சசிதா, அட்ச்சரா மற்றும் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் கலந்து கொண்டு, பரிசோதனை செய்தனர்.

முகாமில் ஊட்டச்சத்து காய்கறி கண்காட்சி, டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி, காச நோய் கண்காட்சி நடந்தது. இதை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் செல்வதாஸ், ஜெயபால், உள்பட ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்