அரியநாயகபுரம் பள்ளிவாசலில் மழை வேண்டி தொழுகை
அரியநாயகபுரம் பள்ளிவாசலில் மழை வேண்டி மும்மதத்தினர் தொழுகை நடத்தினர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரத்திலுள்ள சுன்னத் ஜமாத் ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று மதியம் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்கள் இணைந்து மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு தொழுகை முடிந்த சில நிமிடங்களிலேயே அரியநாயகிபுரம் உட்பட விளாத்திகுளம் சுற்றுவாட்டாரத்திலுள்ள பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.